புதிய வரவு- செலவுத் திட்டம் மக்களின் அடிப்படை வாழ்க்கை செலவுகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டுமென பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், புதிய வரவு- செலவுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த நிலையில், வரவு – செலவுத் திட்டத்தின் நிலுவையை குறைப்பது புதிய வரவு – செலவுத் திட்டத்தின் விசேடஅம்சமாக அமைய வேண்டுமென பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அரசின் வரி வருமானத்தை அதிகரிப்பது மிகவும் அவசியமெனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
