இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான மற்றும் ஜனநாயக எதிர்காலத்தை அடைய உதவும் வகையில் நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் நீண்ட கால கூட்டாண்மையை வழங்குகிறோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.
உயர்மட்ட தூதுக்குழுவில் ஆசியாவுக்கான திறைச்சேரியின் துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கத் தூதர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.