மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை

மட்டக்களப்பு , சந்திவௌி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தமது உறவினர்களால் நேற்றிரவு(06) குறித்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சந்திவௌி பிரதான வீதி பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை தாக்கிய போது காயமடைந்த மூவரும் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் 2 ஆண்களும் பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை