மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய பொருளாதார நெருடிக்கடி உட்பட நாட்டின் நிலைமையினை கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகி நாட்டினை கொண்டுசெல்பவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய ஊழியர்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதிக்கு எதிரான கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

