பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள விடுமுறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 18ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக  கடந்த வாரமும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.  

கல்வி அமைச்சின்ஓ அதிகாரிகளுக்கும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை