காலி – மாகல்ல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலிலிலேயே, குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்று பேர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றில் திடீரென வருகை தந்த மூவர், பாதுகாப்புத் தரப்பினரின் கட்டளைகளையும் மீறி, தமக்கு எரிபொருள் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது குறித்த நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நடவடிக்கைககள் நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறக்கப் போவதில்லை என உரிமையாளர் அறிவித்துள்ளார்.