தேசத்தின் புயல்களாம் கரும்புலி மாவீரர்களின் நினைவு நாளினை முன்னிட்டு (தோஹா கத்தாரில்) உதைப்பந்தாட்ட போட்டி

கரும்புலிகள் நாள் யூலை-5,2022
தோகா-கத்தார்

தேசத்தின் புயல்களாம் கரும்புலி மாவீரர்களின் நினைவு நாளினை முன்னிட்டு தோஹா கத்தாரில் தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஒழுங்கமைப்பில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஓர் இடத்தில் தமிழர்கள் எல்லோரும் இணைந்து உணர்வெழுச்சியுடன் நினைவுகூறப்பட்டது.


பொதுச்சுடரினை தமிழர் கலை அறிவியியல் பேரவையின் செயலாளர் அவர்கள் ஏற்றியதும் ஆரம்பமானது. கரும்புலி மாவீரர்களுக்கு ஒரு நிமிட நேரம் அகவனக்கம் செலுத்தப்பட்டு நெய்விழக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தார் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டது முக்கியமானதாக குறிப்பிடத்தக்கது. அடுத்த தலைமுறையினதுக்கு தமிழர்களிற்கான தேசிய எழுச்சி நிகழ்வுகளை கையளிப்பதே தமிழர் கலை அறிவியியல் பேரவையினரின் நோக்கமாகும். எம் உடன்பிறப்புக்களின் தியாகங்களையும் வரலாற்றினையும் அடுத்த தலைமைறைக்கும் கையளிப்போமாக. கரும்புலி மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலியினை தொடர்ந்து.

கரும்புலிகள் நாள் நினைவினை முன்னிட்டு தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் சுமார் பன்னிரண்டு அணிகள் கலந்துகொண்டன.

பங்கு பற்றிய பன்னிரண்டு அணிகளும் 23/04/2022 அன்று விளையாடி இறுதிச்சுற்றுக்கு மூன்று அணிகள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டன. அவ் மூன்று அணிகளுக்குமான இறுதிக்கட்ட போட்டி 30/04/2022 நடைபெறுமென தமிழர் கலை அறிவியியல் பேரவையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டது. இறுதிச்சுற்று 30/04/2022 அன்று நடைபெற்றது வடமாகாண விளையாட்டு அணி ஒன்றும் கிழக்கு மகாணத்தை சார்ந்த அணி இரண்டும் கலந்துகொண்டது.
இதில் வடமாகண அணி முதலாவது இடத்தை தனதாக்கிக்கொண்டது.,கிழக்கு மாகாண அணிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

வெற்றி பெற்ற அணிகளுக்காக தமிழர் கலை அறிவியியல் பேரவையினரின் ஆலோசனைக்கு அமைவாக மாவீரர்களின் பெயர்களில் வெற்றிக்கிண்ணங்கள் தயார் படுத்தப்பட்டு விளையாட்டு அணிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

முதலாவது வெற்றிக்கோப்பையாக முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களின் பெயரில் வழங்கப்பட்டது. இவ்வாறு மில்லர் கோப்பையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதே போன்று இரண்டாம் வெற்றிக்கோப்பையாக முதல் பெண் கடற் கரும்புலி மாவீரர் கப்டன் அங்கயற்கண்ணி அவர்களின் பெயரில் வழங்கி வைக்கப்பட்டது. மூன்றாவது வெற்றிக்கோப்பையாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கரும்புலி மாவீரர் மேஜர்  ரங்கன் அவர்களின் பெயரில் வழங்கி வைக்கப்பட்டது.
 
மற்றும் விளையாட்டில் கலந்துகொண்ட பன்னிரண்டு அணிகளுக்கும் தமிழீழத் தேசியத்தலைவரின் படம் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. அத்தோடு சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் கோள் காப்பாளர்களுக்கும் வெற்றிக் கோப்பைகள் மற்றும் கரும்புலிகள் சின்னம் பொறிக்கப்பட்ட பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது. 

அத்தோடு சிறப்பு உரையினை தமிழர் கலை அறிவியியல் பேரவையின் ஒழுங்கமைப்பாளர் நிகழ்த்தியதோடு நிகழ்வுகள் நிறைவடைந்தது.

புதியது பழையவை