மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கர வண்டிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 12 துவிச்சக்கரவண்டிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த நபரையும் நேற்று கைது செய்துள்ளனர்.
காத்தான்குடியை சேர்ந்த நபரே இவ்வாறு துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.