வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி - நீதி கோரி போராட்டம்

திருகோணமலையை சேர்ந்த யுவதியொருவர் வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பிற்காக சென்றபோது வெளிநாட்டில் திருமணம் முடித்து விட்டு தன்னிடமிருந்த சொத்துக்களை ஏமாற்றிச்சென்ற இளைஞரொருவரிடம் தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி இளைஞனின் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் திருகோணமலை - ரொட்டவெவயை சேர்ந்த ரபீக் நிம்சாத் என்பவருடைய வீட்டுக்கு முன்னாலேயே நேற்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரியவருவதாவது,

தந்தையின்றி வளர்ந்து வந்த இந்த யுவதி கஷ்டம் காரணமாக குவைத் நாட்டிற்கு சென்றதாகவும், அங்கு வீட்டு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞர் தன்னை திருமணம் செய்து இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்ததாகவும் தான் உழைத்த அனைத்து சொத்துக்களையும் இவருக்கே கொடுத்ததாகவும் அத்தனை சொத்துக்களையும் பெற்றுக்கொண்டு தன்னை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்தார்.

தன்னை திருமணம் செய்து தன்னிடம் இருந்த சொத்துக்களை இளைஞனின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கணவனுடன் இணைந்து பெற்றுக் கொண்டதாகவும், தன்னிடம் வாங்கிய சொத்துக்களை பெற்றுத் தருமாறும், குறித்த பெண்ணின் தேவையற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதாகவும், இவ்வாறான செயற்பாட்டிற்கு தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததுடன், தனக்கு நடந்த சம்பவத்திற்கு நீதியை ஊடகங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு தெரியப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்ற புகைப்படம் மற்றும் காணொளிகளை நிறுத்தி தருமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
புதியது பழையவை