மட்டக்களப்பு- கல்லடி இராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா பாலர் பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வுகள் நேற்று(29) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணி மண்டபத்தில் விமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வானது விருந்தினர்களை ஆராதி எடுத்து வரவேற்றலுடன் ஆரம்பமாகி இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் அக்ஷராத்மானந்தஜீ மகராஜ் அவர்களால் தலைமையுரையும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளரினால் சிறப்புரையும், மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மகராஜ் அவர்களினால் ஆசியுரையும் நிகழ்த்தப்பட்டதுடன் இராமகிருஷ்ண மிஷன் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் அதிதிகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்று அதிதிகளுடன் இராமகிருஷ்ன மிஷன் விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுப்படமும் எடுக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
இந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் அக்ஷராத்மானந்தஜீ மகராஜ், மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மகராஜ், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.V.வாசுதேவன், மட்டக்களப்பு உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.ஹரிகர்ராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.