சந்தேகநபரின் நடவடிக்கையினால் எலும்பு முறிந்த நிலையில் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆற்றில் யானை குளிப்பதை கரையிலிருந்து குழந்தை பார்த்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக சென்ற சந்தேக நபர் குழந்தையை தூக்கி யானை இருந்த இடத்திற்கு வீசியதாக தெரிவிக்கப்படுகிறது .
சம்பவம் தொடர்பில் குழந்தையின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் (54) வயதுடையவர் எனவும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.