2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த லோ.கிசோபன் கணித துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் நான்காம் இடத்தினை பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொம்மாதுறையினை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் கணித பிரிவில் இந்த சாதனையினை படைத்து பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.