வவுனியா தாண்டிகுளத்தில் இன்று புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (13)அதிகாலை கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான மைக்கல் தினகரன் என்பவரே உயிரிழந்தவராவர்.