கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று(03) இடம்பெற்றுள்ளது.

100 நாள் செயல்முனைவின் 34 ஆம் நாளாகிய நேற்று முழங்காவில் பிள்ளையார் கோயில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஒன்று கூடி மூன்று மணித்தியாளம் தங்களுடைய உரிமைக்காக கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் என்ற விடயத்தினை வலியுறுத்தி மக்களால் வில்லிசையும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை