மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவுக்குப்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத்திட்டம் எனும் கிராமத்தில் இரவு 9 மணியளவில் இரண்டு காட்டு யானைகள் புகுந்துள்ளது.
இதன்போது தீப்பந்தம் ஏந்தியும்,பட்டாசு கொழுத்தியும் யானைகளை விரட்டி முயற்சித்த போதிலும் யானைகள் அங்கிருந்த பயன்தரு பயிர்களையும் தென்னை மரங்களையும் அழித்துவிட்டு சென்றுள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே,யானைகள் கிராமத்தைவிட்டு வெளியேறி விட்டதாக நினைத்து மக்கள் மீண்டும் உறக்கத்திற்குச் சென்ற போது மீண்டும் அதிகாலை
5மணிக்கு காட்டு யானைகள் கிராமத்திற்குள் உள்நுழைந்ததாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மிக அண்மைக்காலமாக படுவான்கரைப் பிரதேசங்களில் காட்டுயானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்துள்ளது.