வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கு போரதீவுப்பற்று பிரதேசத்தில் பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்திற்குபட்பட்ட வெல்லாவெளியில் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கான பயிர் கன்றுகள் வழங்கி வைக்கபட்டன.

தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டம் மேற்கொள்வதற்கான பயிர்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் வீட்டுத் தோட்டம் தொடர்பிலான கையேடுகளும் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

லண்டனில் அமைந்துள்ள றே ஓவ் ஹோப்நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நாமே நமக்கு எனும் அமைப்பினூடாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அப்பகுதி பொதுசுகாதர பரிசோதகர் குபேரன், நமக்காக நாம் அமைப்பின் பிரதிநிதிகள், தொண்டர்கள்,பயனாளிகள் உள்ளிட்ட பலரும், இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுக்கும் முகமாக நாம் ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் ஓரளவுக்ககேனும் நாம் உணவு நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்ளலாமென இதன்போது கலந்து கொண்டிருந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
புதியது பழையவை