அதாவது ஆற்றிலே உள்ள மீன் இனங்கள், நண்டு இனங்கள், நீர்வாழ் உயிரினங்களின் உடல்கள் இன்று கரை ஒதிங்கியது. இதற்கான காரணம் முற்றிலும் "இறால் பண்ணைதான்" என்பதனை அனைத்து உறவுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.எமது வாகரை பிரதேச மக்களின் வாழ்வாதாரமே மீன் பிடிதான் ஆனால் தற்போது அது சாத்தியமாகாது அப்போது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யப்போகின்றீர்கள்.
எமது வாகரை பிரதேசமானது கல்வியிலும் , பொருளாதாரத்திலும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்றது ஆனால் என்னதான் முன்னேறினாலும் எமது அடிப்படை வாழ்வாதாரமே எமக்கு முக்கியம்.ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை அபிவிருத்தி என்னும் அழகிய சொல்லினை கொண்டு அதனை இழிவு படுத்த வேண்டாம். வட்டவானில் தற்போது மீன் பிடி கைத்தொழிலை அழித்து விட்டீர்கள் ஆகவே இதற்கான பிரதி பலனை எதிர்கொள்ள தயாராக இருங்கள்...எமது சகோதரங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உங்களால் பாரிய ஒரு தடை ஏற்பட்டுள்ளது அதனால் நான் நினைக்கின்றேன் எமது வாகரை பிரதேசம் தற்போது கலை,கலாச்சாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வரும் பிரதேசமாகும் . நமது பிரதேசம் வறுமை கோட்டின் கீழே இருக்க வேண்டும் என்று நினைத்து தான் எமது சகோதரர்களின் சோற்றில் மண்ணை அள்ளி வைத்துள்ளார்கள்.எனவே அன்பார்ந்த தமிழ் உறவுகளே இதனையெல்லாம் கவனத்திலெடுங்கள்..குட்ட குட்ட குனிவதற்கு நாம் என்ன அனாதைகளாக?எமது மக்களின் நல் வாழ்வுக்காக குரல் கொடுப்போம்...எனவே அபிவிருத்தி என்ற பெயரில் எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்தி விடுங்கள்.
இதனை அரசியல் வாதிகளும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
அரசியல் வாதிகளே நீங்கள் படித்த இலங்கையர் என்று பாராளுமன்றத்திற்கு உங்களை தெரிவு செய்யவில்லை மக்களிடம் வாக்குகளை பெற்றுதான் பாராளுமன்றம் என்ற கட்டிடத்தை கண்டிருப்பீர்கள்...எனவே நீங்கள் இவற்றுக்கு குரல் கொடுக்க வேண்டும் இதனை செய்வதை விட்டு விட்டு இறால் பண்ணைக்கு ஆதரவு வழங்கும் அரசியல் வாதிகளே உள்ளனர்.வட்டவானில் மறுபடியும் மீன்கள்,நண்டுகளின் நடமாட்டத்தை காண வேண்டும் என்றால் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை காத்திருக்க வேண்டும். அப்போ இரண்டு, மூன்று வருடங்களுக்கு எமது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறிதான். இந்த இறால் பண்னணயினால் வெளிவாரியான முதலீட்டார்களே இலாபம் ஈட்டுகின்றனர்.
என்பதனையும் நாம் உணர வேண்டும். "இறால் பண்ணைக்கு ஆதரவு வழங்கும் நிறுவனம் ஒன்று வந்து கூறியது இந்த அனர்த்தம் ஏற்பட காரணம் விவசாய இரசாயன கழிவுகளும், தலை மழையும் தான் காரணமாம் இந்த காரணத்தை கொண்டு வேற யாரையும் ஏமார்த்தலாம் ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது. இதற்கான உண்மையான காரணம் இறால் பண்ணையில் இருந்து வரும் கழிவுகளே காரணம்...எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது வாழ்வாதரத்தை முன்னேற்ற அயராது உழைப்போம்.