கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக் குழுவினர்

இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் சென்னையில் இருந்து கொழும்பு வழியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, பாடகர் எஸ்.பி.பி.சரண், பாடகி சுவேதா மோகன், பாடகர் மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

புதியது பழையவை