கிழக்கில் தேரோடும் கோயில் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்ற இத்தேரோட்டத் திருவிழாவில் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுவாமி தேரேறி வெளிவீதியில் வலம் வந்தார்.
தாந்தோன்றீஸ்வரர் உமாதேவியர் சமேதராய் சித்திரத் தேரிலும், பிள்ளையார் தேரிலும், அமர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்திருந்தது.