உலகின் பெரிய பணக்காரரானார் அதானி!

உலக பணக்காரர்களின் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்தைப் பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி (60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

இந்த நிலையில், இன்று (16)காலை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை புதிய உச்ச விலையில் துவங்கின.

அதனை கணக்கில் கொண்டு, போர்ப்ஸ் (forbes) ரியல் டைம் பில்லியனர்ஸ் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எல்விஎம்எச் குழுமத் தலைவர் பெர்னார்ட் அர்னால்டைப் பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி 155.4 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 2 வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4 வது பெரிய பணக்காரராக இருந்தார்.

அதன் பின், குறுகிய நாள்களிலேயே மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு தற்போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்தையும் ஆசியாவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பட்டியலில் உலக பணக்காரர்களாக எலான் மஸ்க் (ரூ. 21.8 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.38 லட்சம் கோடி) 3 வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 11.9 லட்சம் கோடி) 4 வது இடத்திலும் உள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 105.3 பில்லியன் டொலர் (ரூ. 8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5 வது இடத்தில் உள்ளார்
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 8 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
புதியது பழையவை