இன்று மது ஒழிப்பு தினம்

இலங்கையில் மதுபான கடைகள் மற்றும் மதுபான வர்த்தக நிலையங்கள் இன்று (03.10.2022) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரித் திணைக்களமே இந்த விடயத்திணை அறிவித்துள்ளது.
மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03.10.2022) மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களின் காரணமாக சில வகை மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சிகரெட் வகைகளின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை