மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரத்ததானமுகாம்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இன்றைய தினம்(16-10-2022) இரத்ததான நிகழ்வு நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான நிகழ்வுகளும் நடைபெற்றன.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஒத்துழைப்புடனும் இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

இந்த இரத்ததான முகாமுக்கான அனுசரணையினை மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005ஆம் வருட உயர்தர மாணவர்கள் வழங்கியிருந்தனர்.


இதன்போது மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் இரத்தானமுகாமும் நடாத்தப்பட்டது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையினை கருத்தில்கொண்டு இந்த இரத்தானமுகாம் நடாத்தப்பட்டதாக பழைய மாணவர்கள் தெரிவித்தனர்.

புதியது பழையவை