ஐ.நா மனித உரிமை பேரவையில் படுதோல்வியை சந்திக்க போகும் இலங்கை

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை எந்த வழியிலும் இலங்கை அரசால் தோற்கடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு ஆதரவாக ஆறு நாடுகள் மாத்திரமே வாக்களிக்கும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எதிரான யோசனையை ஆதரிக்கும் பல முக்கிய நாடுகள்

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா,ஜேர்மனி,மலாவி,மொண்டினீக்ரோ மற்றும் கிழக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இணை அனுசரணை வழங்குகின்றன. 

அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிவ்டென்ஸ்டையின், லக்ஸம்பேர்க், மாஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவேக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வட அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே யோசனை ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா, நேபாளம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது.

வழமையாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் ரஷ்யா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இம்முறை வாக்களிக்கும் உரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவும் நேபாளமும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளன.

அதேபோல் கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வந்த மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பில் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளன.

இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் 6 ஆம் அல்லது 7 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்புக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தற்போது ஜெனிவா சென்றுள்ளார். 
புதியது பழையவை