பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நுகேகொட கிராமச் சந்தியில் இன்று (18) காலை 03 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று காலை 6 மணியளவில் கோட்டையில் இருந்து பயணித்த பாதை இலக்கம் 138 என்ற தனியார் பஸ் வண்டி வீதி சமிக்ஞை விளக்குகளை அலட்சியப்படுத்தியதன் காரணமாக மேலும் இரு பஸ்களுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ் சாரதி ஒருவர் காயமடைந்து கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய பஸ்சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை