மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி,தொண்டைக் கரப்பான் நோய்களை தடுப்பதற்கான ஏ.ரி.டி தடுப்பூசி ஆகியன ஏற்றும் செயற்பாடு பதில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞா.சஞ்சய் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று பட்டிருப்பு வலயக்கல்வி பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்று நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது.அத்துடன் ஏ.ரி.டி
தடுப்பூசியும் ஏற்றப்பட்டன.
இதில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான சி.ஜீவிதன், த.கஜானன் ஆகியோர் கலந்துகொண்டனர்.