மட்டக்களப்பு மாநகரசபையில் நீண்டகாலமாக நிலவிவரும் குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காண அனைவரும் இணைந்து நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மாநகரசபையின் ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக குப்பைகள் அகற்றுவது தொடர்பிலான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதை அறிவேன். நானும் இந்த பகுதியில் நிரந்தர வசிப்பிடத்தினைக்கொண்டவர் என்ற அடிப்படையில் இந்த பிரச்சினையினால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.