எரிபொருள் தாங்கி விபத்து - சாரதி உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உடபுஸ்ஸலாவை பகுதியில் இடம்பெற்ற எரிபொருள் தாங்கி விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (05) அதிகாலை சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடபுஸ்ஸல்லாவை பகுதியில் தொழிற்சாலை ஒன்றுக்கு எரிபொருள் கொண்டு சென்று அதனை இறக்கிவிட்டு வரும் போது எரிபொருள் தாங்கி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி பலியாகியுள்ளதுடன் கடும் காயங்களுக்கு உள்ளான மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துளளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடபுஸ்ஸல்லாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை