மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான அடை மழை பெய்து வருகின்றது. இன்று (10)வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 96.9மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.
கடும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் உட்பட தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.