மனைவியை மண்வெட்டிப்பிடியால் தாக்கிக்கொலை செய்த கணவன்



மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை - நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியைக் கணவன் மண்வெட்டிப் பிடியால் அடித்துப் கொலை செய்துள்ளார்.

கரடியன்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொலையாளியான 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கரடியனாறுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை