மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழப்பு



மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (17.12.2022) பதிவாகியுள்ளது.

மாவடிவேம்பை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தொடருந்தில் மோதி உயிரிழப்பு
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தில் அவர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர் மது போதையில் புகையிரத தண்டவாளத்திலிருந்து எழும்ப முடியாத நிலையில் இருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.


உயிரிழந்தவரின் தந்தையினால் சடலம் அடையாளம் காணப்பட்டதோடு, சடலம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை