ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று (18)காலை ஆரம்பமானது.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு பாதுகாப்புடன் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆரம்பமானது.
பட்டிருப்பு கல்வி வலயம்,மட்டக்களப்பு கல்வி வலயம்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்,கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்களிலும் 13 இணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் 104 பரீட்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 9418 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் இதில் 4762 ஆண் பரீட்சார்த்திகளும் 4656 பெண் பரீட்சார்த்திகளும் அடங்குவதாக கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்தது.
இன்று காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட மாணவர்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது.