கட்டுநாயக்கவிமான நிலைய வரலாற்றில் பாரிய தங்க கடத்தல் முறியடிப்பு


சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில், இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல், நேற்று (09) முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கத்தை அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தங்கம் ஜெல் போல தயாரிக்கப்பட்டு, உள்ளாடைகளில் மறைத்துவைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது.

24 கரட்டில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் நிறைவு செய்யப்படாத வகையில் கைகள், கழுத்துகளில் அணிந்தும் எடுத்துவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புதியது பழையவை