நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலை தரம் 05 புலமைப் பரிசில் 2022 பரீட்சையில் மற்றுமொரு வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் அதிக கூடிய மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக தன்னை பதிவு செய்துள்ளது.
இப்பாடசாலையில் 16 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த சாதனையை படைத்த மாணவிகளையும், அதற்கு காரணமாக இருந்த தரம் 05 ஆசிரியர்களையும், தரம் 1 முதல் 4 வரை கற்பித்த ஏனைய ஆசிரியர்களுக்கும், பகுதித் தலைவர் ஏ.ரஹ்மான் ஆசிரியருக்கும், பொறுப்பதிபராக செயற்பட்ட பிரதி அதிபர் எம்.ரி.நௌபல் அலிக்கும் அதிபர் ஏ.எல்.நிஸாமுதீன் தமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றார்.