எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார் ஜனாதிபதி ரணில் !எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வாய்ப்புள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2024 தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று 2030 வரை ஜனாதிபதியாக நீடிப்பார் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

2019 இல் பதவியேற்ற ஜனாதிபதியின் நான்கு வருட பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை