மட்டக்களப்பு திக்கோடை மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்





இலங்கை தமிழரசுக்கட்சியிலிருந்த சிலரின் நடவடிக்கைகள் காரணமாகவே கூட்டமைப்பு என்னும் பஸ்ஸிலிருந்து சிலர் இறங்கிச்சென்றனர்.

அந்த பஸில் தொல்லை கொடுத்தவர்கள் இன்று இறங்கிச்சென்றுள்ளதன் காரணமாக அந்த பஸிலிருந்து இறங்கிச்சென்றவர்களில் பலர் ஏறியதால் மீண்டும் பலமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று (11-01-2023)மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி கிராமிய நீர்வழங்கல் திட்டம் ஊடாக திக்கோடை மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் உள்ள 112குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கிவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஏற்பாட்டில் நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீர் விநியோக திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. 

நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இன்று (11-01-2023)  காலை திக்கோடை மாதிரி வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளர் நா.தருமலிங்கம், பிரதேசசபை உறுப்பினர் விக்னேஸ்வரன்,தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் நீர்வழங்கல் மேற்பார்வை உத்தியோகத்தர் பிரவீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதநிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திக்கோடை மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.

கோடைகாலங்களில் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இன்று குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் நிலைமையேற்பட்டுள்ளது.
புதியது பழையவை