கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது


தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது ஆரோக்கியமான விடயமல்ல என்றும் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


தனித்து போட்டியிடுவதனால் கூட்டமைப்பிற்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகலாம் என்றும் தேர்தலின் பின் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என எவரும் சிந்திக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக பல்வேறு உறுதி மொழிகளை மக்களுக்கு வழங்கியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை