பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரனுக்கு, உயிர் அச்சுறுத்தல்



முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனுக்கு, கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினருக்கு, அரச உத்தியோகத்தரால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக, இன்று காலை, முள்ளியவளை பொலிஸ் நிலையம் சென்ற பிரதேச உறுப்பினர், தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவரின் பெயரையும் ஆதாரத்தையும் காண்பித்து, முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சப்பவம் தொடர்பில், முள்ளியவளை பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை