பிள்ளையானின் வசம் இருந்த வாழைச்சேனை பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது



கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெத்தினம் கமலநேசன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச சபைக்கான 2023ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டது.

தோற்கடிக்கப்பட்ட காலப்பகுதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தவிசாளரே அங்கு தவிசாளாக பணியாற்றியிருந்தார்.


புதிய தவிசாளர்
இரண்டு வரவு- செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதால், பதவி செயலிழந்த நிலையில், புதிய தவிசாளர் தெரிவு இன்று (24.01.2023) நடைபெற்றது.

இதன்போது புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சமூகசேவையாளராக ஆசிரியருமான கமலநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனை உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்றைய அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 23 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.

கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரியுள்ளனர்.

தவிசாளருக்கான முன்மொழிவு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் கா.நடராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் க.கமலநேசன் ஆகிய இருவரும் தவிசாளர் பதவிக்காக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டனர்.

இதன்போது நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட க.கமலநேசனுக்குகு 12 வாக்குகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட கா.நடராசா என்பருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம்ஸ் காங்கிரஸ் கட்சியின் 2 பேரும் ஜக்கிய தேசிய கட்சியில் 01 வரும் என 3 பேர் நடு நிலை வகித்துள்ளனர்.

இன்றைய கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் எஸ்.பிரகாஸ்,கிழக்கு மாகாண ஆய்வு உத்தியோகஸ்த்தர் என்.ஜங்கரன் ஆகியோர் நிர்வாக உத்தியோகஸ்த்தர்களாக கடமையாற்றியுள்ளனர்.

புதியது பழையவை