இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் பதிவு



இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் இன்று அதிகாலை (18) பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

சுமார் 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கொரண்டலோவின் தென்கிழக்கே கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் (91 மைல்) தொலைவில் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மேலும் நிலநடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை