மார்ச் 9 இல் தேர்தல் நடைபெறாது – தேர்தல்கள் ஆணைக்குழு



வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை குறிப்பிடவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு முன்னதாக அறிவித்திருந்தது.

தபால் வாக்குச்சீட்டுகள் அரச அச்சகத்தில் இருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால், தபால் மூல வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை