பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சாரணர் ஸ்தாபக தினம்!



மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்துக்கான சாரண ஸ்தாபக தினமானது இன்று (22-02-2023) மட்/ பட்/ பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் அதிபரும் மாவட்ட சாரண சங்க உதவி மாவட்ட ஆணையாளருமான திரு. A. புட்கரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. S. சுரேஷ் கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து சாரணர்களுக்கு சாரணியத்தின் பெறுமதியினையும் பெருமையினையும் கூறினார்.

தொடர்ந்து உதவி மாவட்ட ஆணையாளரான திரு. A. புட்கரன் அவர்கள் பேடன் பவுல் பிரபுவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பேசுகையில் வாழ்க்கையில் பாடசாலைக் கல்விக்கு வழங்கப்படுவது போன்ற அந்தஸ்தை சாரணியத்துக்கும் வழங்கப்படுவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நிகழ்வில் சாரண தலைவர்களும், கனிஷ்ட சிரேஸ்ட சாரணர்களுடன் திரி சாரணர்களும் பங்கு பற்றி பாடசாலை வளாகத்தில் சிரமதான நிகழ்வினையும் நடாத்தியது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை