பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் நேற்று(15) மரண தண்டனையை விதித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்காக அதிகாரிகளுக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அப்போது திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.