வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!



கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலநறுவை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும், மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படகூடிய தாக்கங்களிலிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதியது பழையவை