முன்னாள் போராளியை நாய் குளிப்பாட்டவைத்து - மகிழ்ச்சிப்பட்டுக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதி!!அவரை அரசியல்வாதி என்றும் கூறலாம்… பெரிய வர்த்தகர் என்றும் கூறலாம்.. இலங்கை தமிழ் அரசியல் பரப்பில் நீண்டகாலமாக தீர்மாணிக்கின்ற சக்தியாக இருந்துவருகின்ற ஒரு ஊடக முதலாளி என்றும் கூறலாம்.

அவரை பெரிதாக அறியாதவர்களின் கேட்டால்..’நல்லவர்..’ ‘வல்லவர்..’ ‘நாலும் தெரிந்தவர்..’ என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் நாங்கள் கேட்டதோ நீண்டகாலம் அவருடன் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற அவருடை ஊழியர் ஒருவரிடம்…

அந்தப் பெரு முதலாளி பற்றி அவரது ஊழியர் இப்படித்தான் கூறுகின்றார்:

"அவர் எப்பொழுதும் சொந்தப்புத்தியில் இயங்குபவர் அல்ல.

அவருக்கு விசுவாசமானவராக நடிப்பவர்கள் எவரையாவது பற்றி சொன்னால் அதையே வேதவாக்காக எடுத்து அவரை பழி வாங்குவார்.

தனது அலுவலகத்தில் பணிபுரிபவர்களை கள்ளனை காவல்துறை பிடிப்பது போல் பிடிக்க பதுங்கி பதுங்கி வருவார்.

கட்சியில் தன்னை நிலைநிறுத்த கட்சித் தலைவருக்கு இலட்சம் இலட்சமாக அள்ளி விசுக்குவார். ஆனால் அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒருவர் சம்பளம் கூட்டி கேட்டால் அதனை அவர் கண்டு கொள்ள மாட்டார்.

ஊருக்கடி உபதேசம் உனக்கில்லையடி மகளே என்ற மாதிரி வெளியில் தமிழ் தேசியம் பற்றி வாய் கிழிய கத்துவார்.

ஆனால் தனது வீட்டில் முன்னாள் போராளியை வைத்து அவர் வளர்க்கும் நாய்க்கு குளிப்பாட்டுவது.. அதற்கு இறைச்சி வாங்கி போடுவது.. அவற்றின் மலத்தை அள்ள வைப்பது… மற்றும் தனது படுக்கையறை விரிப்புகளை அழகாக வைத்திருக்க செய்வது… தான்போடும் உடுப்புகளை அயன் பண்ண வைப்பது… தனக்கு சமைத்து போடுவது ஆகிய வேலைகளை கடுமையாக வாங்குவார்... இப்படிச் செய்வதில் அவருக்கு இனம்புரியத ஒரு மகிழ்ச்சி வேறு.
புதியது பழையவை