பெண் விண்ணப்பதாரர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு!இலங்கையில் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் 12,700,000 பேரில் 1,122,418 பேர் பெண்கள் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 2082 பெண்கள் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 23,488 பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.

விண்ணப்பதாரர்களில் அதிகரிப்பு
எனினும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான 10 வருட காலப்பகுதியில் பெண் விண்ணப்பதாரர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 943749 பெண்கள் வாகன சாரதி உரிமத்தை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை