மட்டக்களப்பில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு!



மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் சுமார் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிளைத் திருடிய திருடன் தப்பியோடியுள்ளான்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்துள்ளார்.

திருடன் தப்பியோட்டம்
நேற்று முன்தினம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவுள்ள சிகரம் பகுதியிலுள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்தே குறித்த மோட்டார் சைக்கிளை திருடன் திருடிச் சென்றுள்ளான்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை காங்கேயனோடை காட்டுப்பகுதியில் போர்வையால் மூடிவைத்து விட்டு திருடன் தப்பிச் சென்றுள்ளான்.

இதனை தொடர்ந்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி றஹிம் தலைமையிலான பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டுவருவதுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை