தஜிகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்!தஜிகிஸ்தானில் முர்கோப் எனும் பகுதியில் இன்றைய தினம் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

காலை 6 மணியளவில் 6.8 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தானில் உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பீதிக்குள்ளான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதியது பழையவை