இந்து ஆலயத்திற்குள் பாதணிகளுடன் சென்ற சஜித்தின் பாதுகாவலர்கள்!யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யாழில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - கொம்பனிப்புலம் பகுதியிலும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது ஆரம்ப நிகழ்வாக குறித்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது சஜித்திற்கு பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர்கள் காலணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் காலணிகளை கழற்றிவிட்டு சென்றபோதும் அவரது பாதுகாவலர்கள் இவ்வாறு செய்தது அங்கிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் பெயரை மாற்றிய சஜித்
மேலும் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - கொம்பனிப்புலம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மேடையின் பின்புலத்தில் கட்டப்பட்டிருந்த காட்சிப் பதாகையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயர் ஐக்கிய மக்கள் கட்சி என மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாட்டை பார்வையிட்ட மக்கள் "கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா?, கட்சியின் பெயரே தெரியாதவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு என்ன செய்வார்கள்" என முணுமுணுத்ததை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பிரச்சாரக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவர் 3.30 மணிக்கு பிறகே கூட்டத்தில் பங்குபற்றினார். இதனால் கூட்டத்திற்கு வந்த மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
புதியது பழையவை