நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் !சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும், மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவிர, கொழும்பு முதல் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை