கரிநாள் கதை கூறி வீண் விரையம் செய்வதும், கறுப்புக் கொடி ஏற்றுவோ மென்று அர்த்தமற்ற ஆர்ப்பரிப்புக் காட்டுவதும் ஈழத் தமிழர் வாழ்வில் எதையும் சாதித்துவிடாது.
தேசத்தின் சுதந்திர தின நன்நாளை அவமதிப்பதும், அவதூறு சுமத்துவதும் அவரவரின் கொள்கை மீதான பலவீனத்தையும், அவரவர் கொண்டுள்ளதாகக் கருதும் ஆற்றல் மீதான நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமையுமென்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரி வித்துள்ளார்.
தமிழ் மக்களை உரிமைகளுடனும், சமத்துவத்துடனும் முகமுயர்த்தி வாழச் செய்வதற்கு மாறாக, தொடர்ந்தும் தமிழர்கள் இருளில் தீராப்பிரச்சினைகளுடன் வாழ வேண்டுமென்று விரும்புகின்ற வீணர்களை தோற்கடிக்க தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்கவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துளார்.